ஆட்சி செய்த விழுப்பறையர்கள்....பறையர்கள் வாய் மொழி வரலாறு*....... மு.அறிவுடைநம்பி
தந்தை, தாய், மகன்கள், மகள்கள் குழந்தைகள், அண்ணன் தம்பிகள் நிறைந்த இப்படியான குடும்பங்கள் குதிரை வண்டியில், குதிரையிலும் வந்திரங்கி வீர துங்கபட்டில், பூமணி ஏரி கரையோரம் வயலில் ஒரு இரவு முழுவதும் வேல் கம்புகள் துனையுடன் காவலனோடு, குதிரைகளோடு பசியுடன் அமர்ந்திருக்கின்றார்கள், அவர்களை பாதுகாத்து அழைப்பதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த ஆணையப்பன் உள்ளிட்ட அண்ணன் தம்பிகள் மூன்று பேர் சென்றிருக்கிறார்கள், அந்த குடும்பத்தினர் இருக்கும் இடம் சென்று பேசி பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள்,
எத்தனை வருடத்திற்கு முன்பு உங்கள் முன்னோர்கள் இந்த கிராமத்தை விட்டு சென்றார்கள் இப்போதுதான் நீங்கள் வருகிறீர்கள் சரி நீங்கள் இனி இங்கேயே இருந்து விடுங்கள் எல்லோரும் உறவுகள் தான் துங்கன் உங்களிடம் சொல்லியி்ப்பார் என்று நினைக்கிறேன் என்று ஆணையப்பன் அவர்களிடம் தெரிவித்து விட்டு, அவர் கோவலூருக்கு செல்வதாகவும், நல்ல முறையில் விழுப்பறையர் குடும்பத்தை பார்த்து கொள்ளுங்கள் என்று தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து சென்று இரண்டு நாட்களுக்கு பிறகு வீடு வந்திருக்கிறார், துணி தறிக்கும் பரையரிடம் வேட்டி, புடவை துண்டு போன்ற புதிய ஆடைகள் வாங்கி வந்து கொடுத்திருக்கிறார், அந்த குடும்பத்தை பற ஆணை என்று அழைக்கப்படும் ஆணையப்பன் குடும்பத்தினர் அந்த கிராமத்தில் நிலைக்க செய்திருக்கிறார்கள்,
பெரும் சண்டையால் இடம் பெயர்ந்த அந்த குடும்பத்தினர் பெயர் விழுப்பறைத்தார் குடும்பம் விழுப்பறையர் வகையரா என்று அக்குடும்பத்தை வீர துங்கபட்டில் அழைப்பார்கள். விழுப்பறையர் குடும்பம் என்றும் விழுப்பறைத்தா குடும்பம் என்றும் இன்றும் அவ் ஊரில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அழைக்கிறார்கள், சுற்று வட்டாரத்தில் உள்ள அவரது உறவினர்கள் அனைவரும் அக்குடும்பத்தை விழுப்பறையத்தார் குடும்பம் என்றே அழைப்பார்கள்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆணையப்பன் வம்சாவளியை சேர்ந்த பேரன் ஒருவர் அவரது தாத்தாவிடம் கேட்டுள்ளார் , ஏன் தாத்தா ஆயா வீட்டு குடும்பத்தை விழுப்பறைத்தார் குடும்பம் என்று அழைக்கிறார்கள் ஆயாவின் ஊர் விழுப்புரமா என்று கேட்டுள்ளார் 80 வயது நிறைந்த அந்த தாத்தா தனது பேரனிடம் சொல்லி இருக்கிறார் ஆயா பூர்வீகமும் இந்த ஊர் தான், நடுநாட்டு பறையர்களை விழுப்பறையர் என்று தக்கோலம் முதல் பறையாறு வரை அழைப்பார்களாம் குறிப்பாக சோழ பறையர்கள் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பறையர்களை விழுப்பறையர்கள் என்று அழைப்பார்களாம், இதுதான் எனது அய்யா சொன்னது என்றும், பறையர் சாதியில் சிலரை விழுப்பறையர் என்று அழைப்பார்கள் என்றாராம், சோழர்கள் பலர் இப்போ இருக்கிற இந்த விழுப்புரம் சுற்றுவட்ட பகுதியில் இருந்து சென்று நாடு புடுச்சி ஆண்டார்கள், அவர்கள் அங்கங்கே ஒரு பேரு , பறையர்களுக்கு உள்ள பல பெயர்களில் விழுப்பறையர் என்பதும் ஒரு பெயர், விழுப்புரம் என்ற பெயரே நம்ம பரைசாதி பெயர்தான் என்றாராம்.
உங்க ஆயா குடும்பத்தை காப்பாற்றி இந்த ஊரில் வைத்தது நம்ம வம்சம் தான், இந்த சம்பவம் எந்த ஆண்டில் நடந்து என்று கேட்டால் தெரியவில்லை இந்த விபரம் எனது அய்யா சொன்னார் என்றும் அவருக்கும் அவரது அய்யா சொன்னாரம் ஆனால் இந்த கதை வழி வழியாக விழுப்பறைத்தார் குடும்பத்தை கேலி செய்ய சொல்லி காட்டுகிற வழக்கம் ஆனையப்பன் வம்சாவழியினருக்கு இருந்து வருகிறது. இன்று வீரதுங்கபட்டு கிராமத்தில், அந்த சேரியில் விழுப்பறையர் குடும்பத்திற்கும் ஆணையப்பன் குடும்பத்திற்கும் பல ஆண்டுகளாக பெண் எடுத்தல் பெண் கொடுத்தல் என்ற உறவு முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
விழுப்பறையர்கள் வரலாற்றை சிதைக்கும் முயற்சியை அல்லது களவாடும் வேலையினை தொடர்ந்து சில வன்னியர்கள் செய்து வருகிறார்கள் சாம்பவர் பெயரும் உங்களுக்கு, விழுப்பறையர் பெயரும் உங்களுக்கு என்றால் பறையர் இனத்தில் இருந்துதான் வன்னியர்கள் வந்தார்கள் என்று சொல்லுங்கள் பறையர்கள் நாங்கள் ஏற்கிறோம்,
விழுப்பறையர் பெயர் விளக்கத்திற்கு ஒரு பெரிய கதை ஒன்று விடுவார்கள் பாருங்கள் சகிக்கல, கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா பறையர் வரலாறு அனைத்தையும் களவாடிவிடுவீர்கள், சிதைப்பீர்கள்,
வரலாற்றில் வீரதுங்கப்பட்டு என்பது இன்றைய வீரங்கிபுரம், விழுப்புரம் மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
ப(றை)ரையர் வரலாற்றை மீட்போம்.