இன்று தியாகத்தலைவன் திருமாவளவன்
விடுதலைச்
சிறுத்தைகளே!
இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை..
இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை..
கடமையை உணர்ந்து
எழுச்சிகொண்டு களப் பணியாற்றுவோம்.!
விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி
உழைப்பாலும், உயிர்த்தியாகத்தாலும் கட்டியெழுப்பப் பட்டது.
விலை
கொடுக்காதவர்களின் வெட்டிப்பேச்சைஎட்டி உதைப்போம்.!
ஓய்வறியா தியாகத்
தலைவன் திருமாவளவன்
விதைத்த விதை வீறுகொண்டெழும் என்பதை களமாடி
நிருபிப்போம்?
தற்போதைய நிலையில்
தனிமனித ஆற்றல் மட்டுமே மிக முக்கியமானது.
தேர்தல் களத்தில்
தனிமனித பங்களிப்பு பெருமளவில் இல்லாததை
பகிரங்கமாக நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
நடந்தது
முடிந்தவையாக இருக்கட்டும்.
நடப்பது
எல்லையில்லா எழுச்சியாக தொடரட்டும்...
எதற்கும் உதவாத
புல்லுருவிகள் நமக்கு எதிரான களத்தில்,
பொதுவாதி என்ற பெயரில் சாதிவெறியர்கள் நமக்கு
எதிரான தளத்தில்,
தலித்துகளின்
விடுதலையை விரும்பாத மக்களோடு கள்ள உறவில் ,
இத்தகைய
சாபக்கேடுகளின் பக்கம்
சத்தமில்லாமல்சாய்ந்து
விடுகிற சாமானிய மக்கள்.
இந்த சிக்கலான
சமூகத்தில்
ஆண்டாண்டு காலாமாக
மூன்று வேளை உணவிற்கும்,
இருப்பிடத்திற்கும் மட்டுமே போராடிக்கொண்டிருக்கிற நாதியற்ற
இந்த ஏழை எளிய மக்கள்..எப்படி வெல்லப்போகிறோம்
ஏதுமில்லாமல்?
நவீன காலத்திலும்
எந்த தொடர்பும் இல்லாதவர்களை?
வயிற்று
பிழைப்பிற்கே வழியில்லாத
சமூகத்தை எப்படி வலிமைப்படுத்த போகிறோம்.?
புற முதுகில்
குத்துபவர்களை புறந்தள்ளிவிட்டு,
நம்மை எள்ளி
நகையாடுபவர்களை அள்ளி துடைத்தெறிந்து விட்டு ஒவ்வொரு சிறுத்தையும் தனிமனித ஆற்றலை வெளிப்படுத்துவோம்..!
திருமா
என்கிற தனிமனித ஆற்றல்தான் நம்மைப் போன்ற
கோடிக்கணக்கானவர்களின் நாவை அசையச் செய்தது.
அன்று புரட்சியாளர் அம்பேத்கர்,
இன்று தியாகத்தலைவன் திருமாவளவன்,
காலமில்லை.
கடமையை உணர்ந்து களப் பணியாற்றுவோம்.! அர்ப்பணிப்போம்..!
No comments:
Post a Comment